Vimarsagan Media

Home » World » ஆப்கானிய அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 18 பேர் உயிரிழப்பு மற்றும் 30 பேர் காயம்

ஆப்கானிய அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 18 பேர் உயிரிழப்பு மற்றும் 30 பேர் காயம்

கிழக்கு ஆப்கானிஸ்தானின் லக்மான் மாகாணத்தில், நாடு திரும்பும் ஆப்கானிய அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சனிக்கிழமை அதிகாலை கவிழ்ந்ததில், குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என மாகாண காவல்துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என சின்ஹுவா செய்தி வெளியிட்டு ள்ளது.

தலைநகர் காபூலை கிழக்கு மாகாணத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலையில், சுர்காகான் மாவட்டம், கர்காயி பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் சாலையிலிருந்து விலகிச் சென்று கவிழ்ந்தது.

10 குழந்தைகள் மற்றும் ஐந்து பெண்கள் உட்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் 30 பேர் காயமடைந்ததாகவும் அந்த அறிக்கை உறுதிப்படுத்தியது.

காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கு முக்கிய காரணம் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதுதான் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தாலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அறிக்கை மேலும் கூறியது.

Scroll to Top