ஹிந்தி மற்றும் மராத்தி இசை உலகின் மிகவும் போற்றப்படும் குரல்களில் ஒன்றான, மூத்த பின்னணிப் பாடகி சுமன் கல்யாண்பூர் (89), மும்பையில் காலமானார்.
‘பத்ம பூஷன்’ விருது பெற்றவரான கல்யாண்பூர், தனது காலத்தால் அழியாத பாடல்கள் மற்றும் இந்திய இசைக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பின் மூலம், தலைமுறை தலைமுறையாக வந்த ரசிகர்களின் இதயங்களில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார்.
இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




