Vimarsagan Media

Home » Malaysia » ரிம்பா கஞ்சிங் சுற்றுச் சூழல் பூங்கா நீர்வீழ்ச்சியில் 50 மீட்டர் உயரத்திலிருந்து தவறி விழுந்த நபர் உயிர் தப்பினார்

ரிம்பா கஞ்சிங் சுற்றுச் சூழல் பூங்கா நீர்வீழ்ச்சியில் 50 மீட்டர் உயரத்திலிருந்து தவறி விழுந்த நபர் உயிர் தப்பினார்

இன்று காலை, இங்குள்ள ராவாங்கிற்கு அருகிலுள்ள ரிம்பா கஞ்சிங் சுற்றுச் சூழல் பூங்கா நீர்வீழ்ச்சியில் 50 மீட்டர் உயரத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்த தால், அங்கு குளித்துக் கொண்டிருந்த செயல்பாடு ஆபத்தானதாக மாறியது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாடுகளின் உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார், காலை 10.46 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தமது துறைக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கூறினார்.

அஹ்மத் முக்லிஸின் கூற்றுப்படி, ராவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் (BBP) சேர்ந்த ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, காலை 10.56 மணிக்கு அங்கு வந்து சேர்ந்தனர்.

பாதிக்கப்பட்ட பங்களாதேஷ் நாட்டவர், சுமார் 50 மீட்டர் உயரமுள்ள நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தபோது தவறி விழுந்தார்.

“பாதிக்கப்பட்டவர் சுயநினைவுடன் இருக்கிறார், மேலும் அவரது தலை, இடுப்பு, முதுகு மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலதிக சிகிச்சைக்காக சுகாதார அமைச்சின் (MOH) மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு, தீயணைப்பு வீரர்களால் பாதிக்கப் பட்டவர் கீழே கொண்டுவரப் பட்டதாக அவர் கூறினார்

Scroll to Top