கோலாலம்பூர், 15/12/2025 : கோம்பாக்கில்,தன்னுடன் பயிலும் பள்ளித் தோழருக்கு மரண அச்சுறுத்தல் விடுவித்ததாக 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். இதனை கோம்பாக் ஓ. சி. பி. டி கூறினார்
14 வயது பாதிக்கப்பட்டவரின் தந்தையிடமிருந்து காவல்துறைக்கு புகார் வந்ததை அடுத்து, அம்மாணவர் கைது செய்யப்பட்டதாக கோம்பாக் காவல்துறைத் துணைத்தலைவர் ஓசிபிடி நூர் அரிப்பின் தெரிவித்தார்.
விசாரணையில், மூன்றாம் படிவ மாணவர் பாதிக்கப்பட்டவரிடம் பணம் கேட்டு வீடியோ அழைப்பு செய்ததாகவும், கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நம்பப்படுகிறது. பின்னர் ஜாமினில் விடுவிக்கப் பட்டதாகவும் தெரிய வருகிறது




