Vimarsagan Media

Home » Malaysia » பினாங்கு துணை போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஜைனால் அபிடின் பேராக் தலைமை போலீஸாக நியமனம்

பினாங்கு துணை போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஜைனால் அபிடின் பேராக் தலைமை போலீஸாக நியமனம்

பினாங்கு துணை போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஜைனால் அபிடின் புதிய பேராக் தலைமை போலீஸ் அதிகாரியாக இன்று அமலுக்கு வந்துள்ளார்.

இங்குள்ள ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில் உள்ள மூத்த போலீஸ் அதிகாரி கள் மெஸ்ஸில் நடைபெற்ற இந்த பணிகளின் ஒப்படைப்பு விழாவை புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குனர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி நேரில் பார்த்தார்.

புக்கிட் அமான் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள டத்தோ நூர் ஹிஸாம் நோர்டினுக்குப் பதிலாக முகமட் ஆல்வி நியமிக்கப்பட்டு உள்ளார்.

பேராக் மாநிலம், புசிங்கைச் சேர்ந்த 58 வயதான முகமது அல்வி, மலேசிய அரச காவல்துறையில் (PDRM) 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

இதற்கு முன்னர் அவர் சபா காவல் துறைப் பிரிவில் பணியாற்றியதோடு, புக்கிட் அமான் மேலாண்மைத் துறையின் (நியமனங்கள்) துணை இயக்குநர் பதவியையும் வகித்துள்ளார்

Scroll to Top