சிறு வயதில் மாடலிங் துறையில் ஈடுபட விரும்பினேன். ஆனால், தமிழ்க் குடும்பத்தில் வளர்ந்ததால், அந்த எண்ணம் நிராகரிக்கப்பட்டது. பிறகு, ஒப்பனை மீதான ஈர்ப்பு, விளம்பரத் துறையில் எனது வேலையுடன் இணைந்து, அழகு சார்ந்த உள்ளடக்கங்களை உருவாக்கத் தூண்டியது. என்னை அதிகமாக வெளிப்படுத்திக் கொள்ள முனைந்தேன்.
அது மாடலிங்குக்கு மீண்டும் கைகோர்த்து அழைத்துச் சென்றது. மாடலிங் இப்போது முழுநேர வேலையாக மாறிவிட்டது” என்று கூறும் தபிதா மேரி, அண்மையில் 79-ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டவர்களையும், திரைப்பட விழாவை உலகம் எங்கும் தொலைக்காட்சிகளில் பார்த்த பார்வையாளர்களின் கவனங்களையும் ஈர்த்த அழகியாவார்.
ஜெர்மனியில் வசித்து வரும் தமிழ் வம்சாவளியான அவர், சமூக வலைதளங்களுக்காக ரீல்கள் தயாரிக்கும் உள்ளடக்கங்களை உருவாக்குபவராகவும் இயங்குகிறார். இந்தச் செய்தி வெளி வந்ததும் தபிதா மேரி குறித்த கூடுதல் தகவல்களுக்காக இணையத்தில் கூகுள் செய்து பார்க்க நெட்டிசன்கள் ஆரம்பித்துவிட்டனர்




