Vimarsagan Media

Home » Malaysia » பெரும்பாலான மார்பகப் புற்று நோயாளிகளின், சிகிச்சை முடிவு கவலைகளுக்கெலாம் முடிவு என்பதல்ல!

பெரும்பாலான மார்பகப் புற்று நோயாளிகளின், சிகிச்சை முடிவு கவலைகளுக்கெலாம் முடிவு என்பதல்ல!

அறுவை சிகிச்சை, கீமோதெரபி அல்லது ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகும், ‘புற்றுநோய் மீண்டும் வருமா?’ என்ற அதே கேள்வி அடிக்கடி அவர்களின் மனதில் எழுகிறது இந்தக் கவலை புதிதல்ல என்பது தெளிவாகிறது.

மலேசியா நடத்திய ஒரு கருத்துக்கணிப் பில், ஆரம்ப நிலை மார்பகப் புற்று நோயாளிகளில் 10-ல் 7 பேர், நோய் மீண்டும் வருவதற்கான அபாயம் குறித்து கவலைப்படுகிறார்கள் அல்லது மிகவும் கவலைப்படுகிறார்கள் என்றும், 41 சதவீதம் பேர் தாங்கள் அதைப்பற்றி அடிக்கடி சிந்திப்பதாக ஒப்புக் கொண் டனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

உண்மையில், இந்த நாட்டில் பெண் களின் ஆரோக்கியத்திற்கு மார்பகப் புற்றுநோய் இன்னும் ஒரு பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளது.

‘தேசிய புற்றுநோய் பதிவேடு’ (NCR) 2017 முதல் 2021 வரையிலான தரவுகளின்படி, மலேசியாவில் பெண்களிடையே ஏற்படும் அனைத்து புற்றுநோய் பாதிப்புகளிலும் சுமார் 30 சதவீதம் இந்த நோயால் ஏற்படுகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் ஒன்பது உயிர்களைப் பறிக்கிறது.

Scroll to Top