தனிப்பட்ட கழிவுநீர்த் தொட்டிகளைக் கொண்ட அனைத்து வளாகங்களும், குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவற்றை காலி செய்து சுத்தம் செய்ய வேண்டும்.
தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் (SPAN) அமலாக்கப் பிரிவு (செயல்பாடு கள்) இயக்குநர் ஐனல் யுஸ்மான் முகமது யூசோப், 2006 ஆம் ஆண்டின் நீர் சேவைகள் தொழில் சட்டத்தின் பிரிவு 65(1)(c)-இன் கீழ் இது தேவைப்படுகிறது என்று கூறினார்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வ தற்காக உரிமம் பெற்ற சேவை வழங்குநரை நியமித்து, வளாக உரிமையாளர்கள் கழிவுநீர்த் தொட்டிகளைப் பராமரிக்க வேண்டும் என்று இந்தப் பிரிவு வலியுறுத்துகிறது. இந்தத் தொட்டிகளில் இடவசதி குறைவாக உள்ளது.
“கழிவறைகள், குளியலறைகள், சமையலறைகள் மற்றும் சலவை இயந்திரங்களிலிருந்து வரும் கழிவுநீரைப் பெறுவதற்காக அவை வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்று அவர் இங்குள்ள மெங்லெம்பு தொழிற்பேட்டை யில் இந்தா வாட்டர் கன்சார்டியத்துடன் இணைந்து ஆப்ஸ் கெஜோர் நடத்திய கூட்டு அமலாக்க நடவடிக்கைக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
“தொட்டிகளின் அடியில் உள்ள திடமான படிவுகள் அகற்றப்படாவிட்டால், அவை நிரம்பி வழிந்து மாசுபாடு அல்லது சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக் கூடும்.
” “மேலும், சட்டத்தின் பிரிவு 66 (1)(a)-இன் கீழ், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், வளாக உரிமையாளர்கள் தங்கள் சொந்த கழிவுநீர் அமைப்புக்குப் பொறுப்பாவார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.மக்கள் தங்கள் செப்டிக் டாங்குகளை சுத்தம் செய்யாமல் இருப்பதற்கான பொதுவான காரணங் களில், உரிமையாளர் மாற்றம் அல்லது விதிமுறை பற்றித் தெரியாமல் இருப்பது ஆகியவை அடங்கும் என்று ஐனல் யுஸ்மான் கூறினார்




