புக்கிட் ஜாலிலில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து இயங்கி வந்த ஆன்லைன் சூதாட்டம் மற்றும் மினி கேசினோ கும்பலை, சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து காவல்துறை முறியடித்தது. இந்த சோதனையில் 21 முதல் 44 வயதுக்குட்பட்ட 15 பேர் கைது செய்யப்பட்டதாக செராஸ் காவல் துணைத் தலைவர் லிம் சுன் ஹவ் தெரிவித்தார்.
ஒரு கேசினோ மேசை, நூற்றுக்கணக் கான சூதாட்ட சில்லுகள், சீட்டுக்கட்டுகள், சுமார் RM4,000 ரொக்கம், மடிக்கணினி கள் மற்றும் ஒரு கரோக்கி ஒலி அமைப்பு உள்ளிட்ட சூதாட்ட உபகரணங்களை காவல்துறை பறிமுதல் செய்தது. கொக்கைன் என சந்தேகிக்கப்படும் வெள்ளை நிறப் பொடியைக் கொண்ட நான்கு ஒளிபுகும் பிளாஸ்டிக் பொட்டலங்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பினாங்கு, புலாவ் திக்குஸில் நடந்த ஒரு போதைப்பொருள் தொடர்பான வழக்கில் சந்தேக நபர்களில் ஒருவர் தேடப்பட்டு வந்தது சோதனையில் தெரியவந்தது. இந்த வழக்கு, பொது சூதாட்ட இல்லங்கள் சட்டம் 1953, பொழுதுபோக்கு (கூட்டாட்சிப் பிரதேசம்) சட்டம் 1992 மற்றும் அபாயகரமான போதைப் பொருள் சட்டம் 1952 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.




