Vimarsagan Media

Home » Uncategorized » நெகிரி செம்பிலான் மாநிலத்தேர்தல் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை 91.06% வாக்குப்பதிவாகி உள்ளது

நெகிரி செம்பிலான் மாநிலத்தேர்தல் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை 91.06% வாக்குப்பதிவாகி உள்ளது

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்்முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறையில் 91.06% வாக்குப்பதிவு விகிதம் பதிவாகி யுள்ளதாகத் தேர்தல் ஆணையம் (EC) தெரிவித்துள்ளது.


ராணுவம் மற்றும் காவல் துறை பணியாளர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் அடங்கிய 16,467 தகுதியுள்ள வாக்காளர்களில் 14,995 பேர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ததாகத் தேர்தல் ஆணையச் செயலாளர் டத்தோ கைருல் ஷஹ்ரில் இத்ரூஸ் தெரிவித்தார்.


மாநிலம் முழுவதும் உள்ள 38 வாக்குப்பதிவு மையங்களில் இந்த முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.”இன்று தங்கள் கடமைகளை நிறைவேற்றிய அனைவருக்கும் நாங்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று கைருல் ஷஹ்ரில் ஒரு அறிக்கையில் கூறினார்.


முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று, முன்கூட்டியே வாக்களிப்பதில் 90% வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டிருப்பதாகத் தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹருன் கூறியிருந்தார். இருப்பினும், சமீபத்தில் நடந்து முடிந்த ஜொகூர் தேர்தலில் 94.49% வாக்குப்பதிவு பதிவானதைச் சுட்டிக் காட்டி, இறுதி எண்ணிக்கை அந்த இலக்கை விட அதிகமாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருந் தார்.
மாநிலத் தேர்தலுக்கான பிரச்சாரச் சூழல் மிகவும் விறுவிறுப்பாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, இந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெறவுள்ள வாக்குப்பதிவு நாளில் 72% முதல் 75% வரையிலான வாக்குப்பதிவு விகிதத்தை இலக்காகக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத்தின் 36 இடங்களுக்கு மொத்தம் 103 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்

Scroll to Top