Vimarsagan Media

Home » Malaysia » எஸ்டிபிஎம் தேர்வில்சிறபாப் தேர்ச்சி:- முதல் 18 மாணவர்களுக்கு பொதுப் பல்கலைக்கழகங்களில் சேர வாய்ப்பு

எஸ்டிபிஎம் தேர்வில்சிறபாப் தேர்ச்சி:- முதல் 18 மாணவர்களுக்கு பொதுப் பல்கலைக்கழகங்களில் சேர வாய்ப்பு

2025 ஆம் ஆண்டுக்கான மலேசிய உயர் கல்வித் தேர்வில் (STPM) சிறந்து விளங்கிய முதல் 18 மாணவர்களுக்கு பொதுப் பல்கலைக்கழகங்களில் சேர கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

கல்விக் கட்டணத்தை உள்ளடக்கிய இந்த உதவித்தொகைகள், உயர் சாதனை மாணவர்களுக்கு ஆதரவளிப்பதில் பொதுப் பல்கலைக்கழகங்களின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சைடெக் கூறினார்.

நேற்று STPM தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அவர், “இது, அவர்கள் பட்டப்படிப்பு நிலை வரை கல்வி கற்பதைத் தொடர வழிவகுக்கிறது” என்றார்.

அடுத்து படிக்க வேண்டியவை

துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ, மலேசிய தேர்வுகள் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது அமின் முகமது டாஃப் மற்றும் கல்வி இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முகமது அஸாம் அகமது ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், STPM தேர்வில் சிறந்து விளங்கிய ஒவ்வொருவருக்கும் RM1,000, ஒரு நினைவுப் பலகை மற்றும் ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மொத்தமுள்ள 40,199 மாணவர்களில், 1,336 மாணவர்கள், அதாவது 3.5 சதவீதம் பேர், 4.0 என்ற ஒட்டுமொத்த தரப்புள்ளி சராசரியைப் பெற்றதாக அறிவிக்கப் பட்டது.

STPM தேர்வு முடிவுகள் மேம்பட்டது குறித்து ஃபட்லினா கூறுகையில், ஆறாம் படிவக் கல்வி முறையில் செய்யப்பட்ட மேம்பாடுகள் உட்பட பல காரணிகளால் இது சாத்தியமானது என்றார்.

Scroll to Top