Vimarsagan Media

Home » Malaysia » 11 வயது தன்வி-யின் நாட்டிய அரங்கேற்றம்! ஒட்டுமொத்த நடனக் குருக்களின் பாராட்டுகளும் குவிந்தது!

11 வயது தன்வி-யின் நாட்டிய அரங்கேற்றம்! ஒட்டுமொத்த நடனக் குருக்களின் பாராட்டுகளும் குவிந்தது!

கலை என்பது ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் வெளிப்பாடு. அந்த உயரிய பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, செல்வி தன்வி கரிமெல்லாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

மலேசியாவின் தலைச்சிறந்த நடன ஆசிரியர்களில் ஒருவரான

குருஸ்ரீ டாக்டர் சந்திரமோகன் ருக்குமணி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 3 வயது முதலே பரத கலையை கற்கத் தொடங்கிய தன்வி, தனது திறமை, நளினம் மற்றும் கலைநயத்தால் பார்வையாளர்களை கவர்ந்தார்.

11 வயது நடனமணியின் அரங்கேற்றம் பல நடன ஆசிரியர்களின் கவனத்தை ஈர்த்ததை தொடர்ந்து 50க்கும் அதிகமான நடன ஆசிரியர்கள் தவியின் நடன அரங்கேற்றத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

பாரம்பரிய பாரதநாட்டியத்தின் அழகையும் ஆன்மீக ஆழத்தையும் வெளிப்படுத்திய விதம் அனைவரின் பாராட்டுகளையும் குவித்தார் தன்வி.

புஸ்பாஞ்சலி தொடக்கம் தில்லானா வரை, ஒரு 11 வயது மாணவியின் திறமை கண்டு அசந்து போயினர் நடன ஆசிரியர்கள்.

தன்வியின் திறமைக்கு அங்கீகாரமாக ‘நாட்டிய இளஞ்சுடர்’ எனும் விருது வழங்கி கௌரவித்தது விமர்சகன் மீடியா Vimarsagan Media விமர்சகன் மீடியா .

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையத்தின் இயக்குநர் திருமதி விஜயலட்சுமி சுந்தரராஜன் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

மேலும் மூத்த நடன ஆசிரியர்களில் ஒருவரான நட்டுவத்திலகம் இந்திரா மாணிக்கம் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இளம் கலைஞரான தன்வி கரிமெல்லா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவரின் கலைப் பயணம் மேலும் உயரங்களை எட்ட இறைவனை பிரார்த்திக்கிறோம்.

“கலை வளரட்டும், கலாச்சாரம் நிலைத்திருக்கட்டும்!”

Photo credit Kesavan Era

முழு அரங்கேற்றத்தை கண்டுகளிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Scroll to Top