Vimarsagan Media

Home » Malaysia » கூட்டரசு வாக்காளர்கள் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் ஆட்சி சுவை அறிந்தவர்கள்

கூட்டரசு வாக்காளர்கள் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் ஆட்சி சுவை அறிந்தவர்கள்

தலைநகரம் நிர்வகிக்கப்படும் விதத்தில் பக்கத்தான் ஹரப்பான் கொண்டுவந்த சீர்திருத்தங்களை ஆதரித்துப் பேசிய கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா யோ, கோலாலம்பூர் வாக்காளர்கள் ஏற்கனவே பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் ஆட்சியின் சுவையை அனுபவித்துவிட்டனர் என்று கூறியதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன.

சிங்கப்பூரின் ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், முந்தைய நிர்வாகங்களின் கீழ் பல ஆண்டுகளாக நிலவிய மோசமான நிர்வாகத்திற்குப் பிறகு, கோலாலம்பூ ருக்கு ஒரு மாறுபட்ட மாதிரியை முன்வைப்பதாக யோ கூறினார்.

“கோலாலம்பூரில், நான் மக்களுக்கு ஒரு மாறுபட்ட மாதிரியை முன்வைக்கிறேன். அவர்கள் கோலாலம்பூரில் பாரிசான் நேஷனல் நிர்வாகத்தின் சுவையை அனுபவித்திருக்கிறார்கள். அது ஒரு நரகமாக இருந்தது,” என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டு உள்ளது.

“பூங்காக்கள் போய்விட்டன, நீர்த்தேக்கக் குளங்கள் போய்விட்டன. பெரிகாத்தான் நேஷனலின் சுவையையும் அவர்கள் அனுபவித்திருக்கிறார்கள் – அது முழுக்க முழுக்க திறமையின்மை,” என்றும் அவர் மேலும் கூறினார்.

Scroll to Top