கரகாஸ்: வெனிசுவேலாவில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட தொடர் நிலநிடுக்கத் தால் பலர் இடிபாடுகளில் சிக்கி மாண்டிருக்கலாம் என்று அஞ்சப்படு கிறது அந்நாட்டு அதிகாரிகள் இதுவரை மரண எண்ணிக்கையை உறுதிசெய்ய வில்லை.
தலைநகர் கராக்கசிலிருந்து 160கிலோமீட்டர் தூரத்தில் 7.2 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது நடந்த ஒரே நிமிடத்தில் மற்றொரு 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் அந்நாட்டை உலுக்கியது. மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர், மாண்டோர் எண்ணிக்கை அதிக அளவு இருக்கும் என்று அஞ்சுகின்றனர். பல கட்டடங்கள் இடிந்து விழுந்துவிட்டன.
அமெரிக்கப் புவியியல் ஆய்வக விஞ்ஞானிகள் (USGS) பல்லாயிரக் கணக்கான மக்கள் நிலநடுக்கத்தில் மரணமடைந்திருக்கலாம் என்று கருத்துரைத்தனர். நாடு முழுவதும் நிலநடுக்கம் பாதித்துள்ளதால் 10,000 முதல் 100,000 பேர் வரையில் அதில் மாண்டிருக்கலாம் என்று அவர்கள் கணித்துள்ளனர்.
“கட்டடங்களும் வீடுகளும் இடிந்துள்ளன. எங்களால் முடிந்த அளவு பொதுக் கட்டமைப்புகளைக் கொண்டு செயலாற்றிவருகிறோம். அனைத்துக் காவல்துறை, தீயணைப்புப் படை அதிகாரிகளும் உதவி வருகின்றனர்,” என்று வெனிசுவேலாவின் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடொ கபெலோ தேசியத் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
இதனிடையே, வெனிசுவெலா அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்நாட்டுக்குத் தேவைப்படும் உதவிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் கிரிஸ்தபர் லன்டாவ் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
பேரிடர் உதவிக் குழு, அத்தியாவசியப் பொருள்களை வெனிசுவெலா மக்களுக்கு வழங்கும் சிறப்பு செயல்குழு ஆகியவற்றை உடனடியாக அமைத்துள் ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.




