சென்னை: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரும், முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ பட தயாரிப்பாளருமான கே.வெங்கட நாராயணாவை, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் டெல்லி முகமாக இருக்கக் கூடிய இந்த பதவிக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரை நியமித்தது, தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசின் இந்த நடவடிக்கைக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திரைப்பட தயாரிப்பாளரும், ரியல் எஸ்டேட் அதிபருமான கே.வெங்கட நாராயணா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இவர், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.வி.என் பிராப்பர்டீஸ் நிறுவனராவார். திரைப்படத்துறையில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரோடக்ஷன்ஸ் விக்கிபீடியாவை 2020ல் நிறுவினார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பல பெரிய திரைப்படங்களை தயாரித்துள்ளார். முக்கியமாக, தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக, அவரது கடைசி படம் என்று கூறி ‘ஜனநாயகன்’ என்ற படத்தில் நடித்தார்.
இந்த ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா தான். இந்த படம் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப் பட்டது.
ஆனால் சென்சார் வாரியத்தின் அனுமதி கிடைக்காததால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமானது. அதேநேரம், சிலர் ‘ஜனநாயகன்’ படத்தை இணையதளத்தில் கசிய விட்டனர். இது தமிழகம் மற்றும் அனைத்து பகுதிகளிலும் வைரல் ஆனது




