ஒருதலைப் பட்சமாக அறிவித்ததைத் தொடர்ந்து, கெராக்கன் (Gerakan) கட்சி தனது ஜொகூர் மாநிலப் பிரிவை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது. சனிக்கிழமையன்று (ஜூன் 27) வெளியிடப்பட்ட அறிக்கையில், கெராக்கன் பொதுச் செயலாளர் வோங் சியா ஜென் (Wong Chia Zhen) இதனைத் தெரிவித்தார். ஜூலை 11 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடாமல் விலகியிருக்கும் ஜொகூர் பிரிவின்
முடிவை விவாதிக்க, கட்சியின் தலைவர் டொமினிக் லாவ் (Dominic Lau) தலைமையில் மத்திய தலைமைத்துவக் குழு வெள்ளிக்கிழமை யன்று அவசரக் கூட்டத்தைக் கூட்டியதாக அவர் கூறினார்.
கட்சியின் ஒழுங்குமுறை, கூட்டுத் தலைமைத்துவக் கொள்கை மற்றும் கட்சியின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை மீறியதால், இந்த நடவடிக்கை ஒரு தீவிரமான ஒழுங்கீனம் என்று அக்குழு ஒருமனதாக ஒப்புக்கொண்டதாக வோங் தெரிவித்தார்.
“எனவே, மேலதிக விசாரணை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிலுவை யில் இருக்கும் நிலையில், ஜொகூர் கெராக்கன் குழுவை உடனடியாக இடைநீக்கம் செய்ய அக்குழு ஒருமனதாக முடிவு செய்தது,” என்று வோங் கூறினார்.
மாநில நிர்வாகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்யவும், ‘பெரிகாத்தான் நேஷனல்’ (Perikatan Nasional) கூட்டணிக்கு ஆதரவாகத் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடவும், கட்சியின் துணைத் தலைவர் ஓ டோங் கியோங் (Oh Tong Keong) ஜொகூர் கெராக்கன் பிரிவின் பொறுப்புத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கட்சி உறுப்பினர்கள் அமைதி காக்கவும், தலைமையின் முடிவை மதிக்கவும், ஜோகூர் மாநிலத் தேர்தலில் பெரிகாத்தான் வேட்பாளர்களுக்கான பிரச்சாரத்தில் கவனம் செலுத்தவும் வோங் வலியுறுத்தினார்.




