Vimarsagan Media

Home » World » திடீரென்று 50 டன் தங்க நகைகளை விற்று தள்ளிய இந்தியர்கள்: ..!

திடீரென்று 50 டன் தங்க நகைகளை விற்று தள்ளிய இந்தியர்கள்: ..!

தங்கத்தின் விலை சாதனை அளவுகளை எட்டிய பிறகு தற்போது குறைந்து வருவதால், விலை இன்னும் அதிகமாக இருக்கும்போதே தங்கள் பழைய நகைகளை விற்றுப் பணமாக்கப் பல குடும்பங்கள் ஆர்வம் காட்டி வருதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.106,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.70 குறைந்து, ரூ.13,300க்கு விற்பனையா கிறது.

இது சில வாரங்களுக்கு முன்பு விற்பனையான வரலாற்று உச்சத்தை விட குறைவு. இதனால் மக்கள் பழைய நகைகளை புதிய நகைகளாக மாற்றுவதற்குப் பதிலாக நேரடியாக விற்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் சங்கத்தின் தகவலின்படி ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியக் குடும்பங்கள் சுமார் 50 டன் பழைய தங்கத்தை விற்றுள்ளன; லாபம் ஈட்டும் நோக்கில் பலர் முன்வந்ததால், இது முந்தைய ஆண்டை விட 43 சதவீதம் அதிகரிப்பாகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை சாதனை அளவை எட்டியது; இருப்பினும், அண்மைய வாரங்களில் அதில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டது

Scroll to Top