Vimarsagan Media

Home » World » சீன பில்லியனருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்

சீன பில்லியனருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்காவின் மான்ஹாட்டன் நீதிமன்றம், சீன பில்லியனர் குவோ வென்குய் (Miles Guo Wan Kwok) மீது 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உள்ளது.

குவோ வென்குய், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் என தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும், 2018 முதல் 2023 வரை உலகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து பல மில்லியன் டாலர்கள் மோசடி செய்ததாக நீதிமன்றம் உறுதி செய்தது. GeographicReference

அவரது மோசடி நடவடிக்கைகள் பல குடும்பங்களை நிதி, மனநிலை மற்றும் சமூக ரீதியாக சிதைத்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். சிலர் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழந்ததாகவும், குடும்ப உறவுகள் முறிந்ததாகவும் கூறினர்.

FBI, 2023-இல் நியூயார்க் நகரில் உள்ள அவரது ஆடம்பரமான குடியிருப்பில் அவரை கைது செய்தது. 2024-ஆம் ஆண்டு நீதிமன்றம் அவரை மோசடி, பங்கு சந்தை குற்றங்கள், வயர் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என அறிவித்தது.

நீதிபதி அனலிசா டோரஸ், “சீனாவில் ஜனநாயகத்தை கொண்டு வர விரும்பியவர்களை ஏமாற்றி, அவர்களின் பணத்தை ஆடம்பர வாழ்க்கைக்காக பயன்படுத்தியுள்ளார்” என்று கடுமையாக விமர்சித்தார்

குவோ வென்குய், 889 மில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளார். அவர் தனது செயல்களுக்கு எந்த பொறுப்பும் ஏற்கவில்லை என்றும், தனது நடவடிக்கைகள் யாருக்கும் சேதம் செய்யவில்லை என்றும் வாதிட்டுள்ளார்.

அமெரிக்க வலதுசாரி அரசியல் வட்டாரங்களுடன் தொடர்பு கொண்டி ருந்த குவோ, ஸ்டீவ் பேனனுடன் இணைந்து “New Federal State of China” என்ற அமைப்பை உருவாக்கியிருந்தார்.

இந்த வழக்கு, உலக அளவில் மிகப் பெரிய நிதி மோசடிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Scroll to Top