பந்திங்கில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் கத்திக் குத்து சம்பவத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர், பந்திங் மருத்துவ மனையில் அவசர சிகிச்சையைப் பெற்ற பிறகு தற்போது சீரான நிலையில் இருப்பதாக சிலாங்கூர் சுகாதாரத் துறை தெரிவித்து ள்ளது.
வெளியிடப்பட்ட அறிக்கையில், அந்த மாணவர் காலை 10.13 மணிக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டதாகவும், மருத்துவக் குழுவினர் உடனடியாக அவருக்குச் சிகிச்சை அளித்ததாகவும் அத்துறை குறிப்பிட்டது.
“பாதிக்கப்பட்டவருக்குத் தாமதமின்றி அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயாளியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது; தகுந்த தொடர் சிகிச்சையை உறுதி செய்வதற்கான மேலதிக பரிசோதனைகள் மேற்கொள் ளப்படும் அதே வேளையில், அவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்,” என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
இச்சம்பவம் குறித்து மலேசிய அரச காவல் துறை (PDRM) விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட அத்துறை, பொதுமக்கள் ஊகங்களை வெளியி டவோ அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிரவோ வேண்டாம் என்றும், துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வத் தகவல் மூலங்களையே சார்ந்திருக்குமாறும் கேட்டுக்கொண்டது.
முன்னதாக இன்று, சந்தேக நபர் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதை சிலாங்கூர் கல்வித் துறை உறுதிப்படுத்தியது. மேலும், இச்சம்பவத் தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உளவியல்-சமூக ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க ஆலோசனை ஆசிரியர்கள் (counselling teachers) பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அத்துறை கூறியது.
பாதிக்கப்பட்ட மாணவருக்குச் சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதும், அதே வேளையில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு ஆதரவளிப்பதும் தங்கள் உடனடி முன்னுரிமை என்றும் அத்துறை தெரிவித்தது.
கோலா லாங்காட் காவல் துறை இக்கத்திக்குத்து சம்பவத்தை உறுதிப் படுத்தியுள்ளது; அதே வேளையில், இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விசாரணை யில் இடையூறு விளைவிக்கக்கூடிய சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று அதிகாரிகள் பொதுமக்களிடம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளனர்




