தேர்தலில் முன்னாள் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினின் தலைமையிலான அக்கூட்டணி போட்டியிட்ட 33 தொகுதிகளில் ஒன்றில்கூட அது வெல்லவில்லை. பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 16 பேரும் பாஸ் கட்சியைச் சேர்ந்த 11 பேரும் மலேசிய இந்திய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஐவரும் பெரிக்கத்தான் நேஷனலின் சார்பில் ஜொகூர் தேர்தலில் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல், 2022ஆம் ஆண்டு தேர்தலில் வென்ற புக்கிட் கெப்போங், மகாராணி எண்டாவ் ஆகிய முன்று தொகுதிகளில் தோல்வியடைந்தது தேர்தல் ஆணையம் வெளியிட்ட முடிவுகளில் தெரியவந்தது.
தோல்வியைத் தழுவிய பிறகு மக்களின் தீர்ப்பைத் தாங்கள் மதிப்பதாக பெரிக்கத்தான் நேஷனலில் இடம் பெற்றுள்ள பாஸ் கட்சி கூறியுள்ளது.




