Vimarsagan Media

Home » India » சிங்கப்பூர் எதிர்க்கட்சி ‘ரீஃபார்ம் பார்ட்டி’யின் (Reform Party) தலைவர் கென்னத் ஜெயரத்னம் காலமானார்

சிங்கப்பூர் எதிர்க்கட்சி ‘ரீஃபார்ம் பார்ட்டி’யின் (Reform Party) தலைவர் கென்னத் ஜெயரத்னம் காலமானார்

சிங்கப்பூரின் எதிர்க்கட்சியான ‘ரீஃபார்ம் பார்ட்டி’யின் (Reform Party) தலைவர் கென்னத் ஜெயரத்னம் காலமானார். அவருக்கு வயது 67. கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த கென்னத் சனிக்கிழமையன்று காலமான தாக அவரது மனைவி அமண்டா ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

“குடும்பத்தினர் சூழ, உறக்கத்தில் அவர் அமைதியாக உயிர்நீத்தார்,” என்று அமண்டா ஞாயிற்றுக்கிழமை பதி விட்டார்; இருப்பினும், அவரது இறப்புக்கான காரணம் குறித்த கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

1981-ல் ஆளும் ‘மக்கள் செயல் கட்சி’க்கு (People’s Action Party) எதிராகத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் எதிர்க்கட்சி அரசியல்வாதியான மறைந்த ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்னத்தின் மகன் கென்னத் ஆவார். ‘JBJ’ அல்லது ‘JB’ என்று பரவலாக அறியப்பட்ட மூத்த ஜெயரத்னம் 2008-ல் காலமானார்; அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிலேயே அவரது மகன் ‘ரீஃபார்ம் பார்ட்டி’யின் தலைவரானார்.

கென்னத் 2011, 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டார்; குறிப்பாக 2020 தேர்தலில், ‘குழு பிரதிநிதித்துவத் தொகுதி’ (GRC) ஒன்றில் போட்டியிட்ட ஒரு குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார். மேலும், 2013-ல் நடைபெற்ற இடைத்தேர்த லிலும் அவர் போட்டியிட்டார். எனினும், இத்தேர்தல்கள் எதிலும் அவரால் நாடாளுமன்ற இடத்தைக் கைப்பற்ற முடியவில்லை.

ஜூலை 2024-ல், தான் இங்கிலாந்தில் இருப்பதாகவும், ‘டீப் வெயின் த்ரோம்போசிஸ்’ (deep vein thrombosis – நரம்புகளில் ரத்தம் உறைதல்), ‘பைலேட்டரல் பல்மனரி எம்போலிசம்’ (bilateral pulmonary embolism – இரு நுரையீரல்களிலும் ரத்த உறைவு அடைப்பு) மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கென்னத் தெரிவித்திருந்தார்.

உடல்நலப் பாதிப்புகள் காரணமாக நீண்ட தூர விமானப் பயணங்களை மேற் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும், அதனாலேயே சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாக அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜராக சிங்கப்பூருக்குத் திரும்ப முடியவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

ஏப்ரல் 2025-ல், உடல்நலக் காரணங்களால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் தன்னால் போட்டியிட இயலாது என்று அவர் தெரிவித்திருந்தார்.

Scroll to Top