நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கக்கூடிய ‘சூப்பர் எல் நினோ’ (Super El Nino) நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளதால், மலேசியா அதற்குத் தயாராக வேண்டும் என்று காலநிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.
யுனிவர்சிட்டி கெபங்சஹான் மலேசியாவின் (UKM) காலநிலை மாற்றக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஜுல்ஃபாகர் சாடி, இந்த நிகழ்வின் தாக்கம் வரும் மாதங்களில் இன்னும் தீவிரமடையக்கூடும் என்று கூறினார்.
“உலக வானிலை ஆய்வு நிறுவனம் மற்றும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) ஆகியவற்றின் கணிப்புப்படி, அக்டோபர் முதல் ஜனவரி 2027-க்குள் ‘சூப்பர் எல் நினோ’ ஏற்படலாம். இது வழக்கமாக அதிக மழைப்பொழிவு இருக்கும் வடகிழக்கு பருவமழைக் காலத்துடன் ஒத்துப் போகிறது,” என்று அவர் கூறினார்.
நவம்பர் முதல் மார்ச் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் நீர்த்தேக்கங்களை நிரப்புவதற்குப் போதுமான மழை பெய்யும் என்று அவர் நம்பினாலும், பருவமழைக்குப் பிந்தைய காலகட்டம் குறித்து அவர் கவலை கொண்டுள்ளார்; ஏனெனில், தீபகற்ப மலேசியாவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுவாகக் குறைவான மழையே பெய்யும்.
“பருவமழையின் போது ‘சூப்பர் எல் நினோ’ காரணமாக மழைப்பொழிவு குறைந்தால், வரும் மாதங்களுக்குத் தேவையான நீர் சேமிப்பு இல்லாமல் போகலாம்,” என்று அவர் கூறினார். பருவமழைக்கு முன்னதாக நீர்த்தேக்கங் களிலிருந்து கட்டுப்பாட்டுடன் நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அதிகாரிகள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
“வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடிய கனமழையை முன்னிட்டு, வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பெரும்பாலும் நீர்த்தேக்கங்களிலிருந்து கட்டுப்பாட்டு டன் நீர் வெளியேற்றப்படுகிறது.
எல் நினோ’ நிகழ்வுடன் ஒத்துப் போகக்கூடும் என்பதையும், அதனால் மழைப்பொழிவு குறைய வாய்ப்புள்ளது என்பதையும் நினைவில் கொள்வது அவசியம். எனவே, முன்னெச்சரிக் கையாக நீரை வெளியேற்றும் முடிவை எடுப்பதற்கு முன் வானிலை முன்னறிவிப்புகளை உன்னிப்பாகக் கவனிப்பது மிக முக்கியம்,” என்றும் அவர் மேலும் கூறினார்




