Vimarsagan Media

Home » Malaysia » தபோங் ஹாஜி அமைப்பின் முன்னாள் தலைவரின் காவல் காலம் நீட்டிக்க படாத்தால் இன்று விடுவிக்கப்படுவார்!

தபோங் ஹாஜி அமைப்பின் முன்னாள் தலைவரின் காவல் காலம் நீட்டிக்க படாத்தால் இன்று விடுவிக்கப்படுவார்!

தபோங் ஹாஜி அமைப்பின் முன்னாள் தலைவர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீமின் காவல் காலம் நீட்டிக்கப் படாததால், அவர் இன்று மாலை விடுவிக்கப்படுவார் என்று அவரது வழக்கறிஞர் அமர் ஹம்சா அர்ஷாத் தெரிவித்துள்ளார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420-ன் கீழ் நடைபெறும் விசாரணைக்கு உதவும் வகையில், அஜீஸின் காவல் காலத்தை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி காவல்துறை விடுத்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தற்போதைய காவல் காலம் முடிவடைந்ததும், பாலிங் (Baling) நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரான அவர் மாலை 5 மணிக்குள் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் காவல்துறையினருடன் முழுமையாக ஒத்துழைக்க எங்கள் தரப்பு வாடிக்கையாளர் தயாராக இருக்கிறார் என்ற அடிப்படையில், காவல் கால நீட்டிப்பு விண்ணப்பத்தை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம்.

“எங்கள் வாடிக்கையாளரை காவலில் வைக்காமலேயே விசாரணையைத் தொடர்ந்து நடத்த முடியும். அதிகாரிகளுக்கு கூடுதல் சான்றுகள் தேவைப்பட்டால், எந்த நேரத்திலும் புக்கிட் அமான் காவல் நிலையத்திற்கு நேரில் ஆஜராக அவர் தயாராக இருக்கிறார்,” என்று டங் வாங்கி மாவட்டக் காவல் தலைமையகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தபோது அமர் கூறினார்.

Scroll to Top