பின்னர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் (drug mules) மூலம் அவற்றை வெளிநாடு களுக்குக் கடத்தும் அனைத்துலக கும்பல் ஒன்றின் திட்டத்தை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் முறியடித்தனர்; இது தொடர்பாக இம்மாதத் தொடக்கத்தில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐரோப்பாவிற்குப் போதைப்பொருட்களைக் கடத்தும் வலையமைப்பைச் சிதைப்பதை நோக்கமாகக் கொண்டு, ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 3 வரை நடத்தப்பட்ட ஒரு மாத கால நடவடிக்கையின் விளை வாகவே இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குனர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.
“வடக்கு அண்டை நாடு வழியாகப் பெறப்படும் கஞ்சா மலர்களை, பாயான் லெப்பாஸில் உள்ள பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகிலுள்ள வரிசை வீடுகளிலும் (terrace houses), நெகிரி செம்பிலானின் நிலாய் (Nilai) பகுதிக்கு அருகிலுள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகிலுள்ள வீடுகளிலும் தற்காலிகமாகச் சேமித்து வைப்பதே இந்தக் கும்பலின் செயல்பாட்டு முறையாக இருந்தது.
“பின்னர், அந்தக் கும்பலால் பணிய மர்த்தப் பட்டு பயன்படுத்திக்கொள்ளப் பட்ட பல்வேறு போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் அந்தப் போதைப்பொருட்கள் ஒப்படைக்கப்படும்.
“மொத்தம் 270.27 கிலோ எடையுள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன; இவற்றின் மதிப்பு சுமார் 21.62 மில்லியன் ரிங்கிட் ஆகும். இது சுமார் 630,000 போதைப்பொருள் பயன்பாட்டாளர் களுக்கு விநியோகிக்கப் போதுமான அளவாகும்,” என்று சிலாங்கூர் காவல் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
மூன்று தனித்தனி போலீஸ் சோதனைகளில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில், ஐந்து பேர் போர்ச்சுகல் நாட்டவர்கள், இருவர் சிங்கப்பூரர்கள், மற்றும் தலா ஒருவர் மலேசியா மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 22 முதல் 51 வயதுக்குட்பட்டவர்கள்; இவர் கள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், போக்கு வரத்துச் செய்பவர்கள் மற்றும் கும்பலின் உறுப்பினர்களாகச் செயல்பட்டதாக நம்பப்படுகிறது.
ஆகஸ்ட் 11 அன்று ஷா ஆலாமில் உள்ள சிலாங்கூர் காவல் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் ஒரு பகுதியை போலீஸ் அதிகாரிகள் காட்சிப்படுத்தினர்




