Vimarsagan Media

Home » Malaysia » கெப்போங், தேசா பார்க் சிட்டி அடுக்குமாடியில் நால்வர் உயிரிழப்பு

கெப்போங், தேசா பார்க் சிட்டி அடுக்குமாடியில் நால்வர் உயிரிழப்பு

கெப்போங், தேசா பார்க் சிட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 48 வயதுடைய நபர் ஒருவர் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த நிலையில், அவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

48 வயதுடைய சீன இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் குடியிருப்பு கட்டிடத்திலிருந்து கீழே விழுந்ததாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) பிற்பகல் 3:32 மணிக்குத் தகவல் கிடைத்ததாக கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ஃபடில் மார்சஸ் தெரிவித்தார்.

காவல்துறையினர் அந்த நபரின் வீட்டிற்குச் சென்று, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்ததாக அவர் கூறினார்.

“வெவ்வேறு அறைகளில் மூன்று பேர் இறந்து கிடப்பதை காவல்துறையினர் கண்டனர்,” என்று அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்கள் அந்த நபரின் 47 வயதுடைய மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் – ஒன்பது வயது சிறுமி மற்றும் ஏழு வயது சிறுவன் – என அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.

மூன்று பேரின் கழுத்திலும் பலத்த காயங்கள் இருந்ததாக ஆணையர் ஃபடில் தெரிவித்தார்.இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கத்தி ஒன்றையும் நாங்கள் கண்டெடுத்தோம்.”

“சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.

இவ்வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காகவும், அதே சமயம் திடீர் மரணம் தொடர்பான வழக்காகவும் வகைப்படுத்தப் பட்டுள்ளதாக ஆணையர் ஃபடில் தெரிவித்தார்.

Scroll to Top