Vimarsagan Media

Home » World » இம்ரான் கானுக்கு உயர்தர சிகிச்சை… கபில்தேவ், கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் கேப்டன்கள் கடிதம்!

இம்ரான் கானுக்கு உயர்தர சிகிச்சை… கபில்தேவ், கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் கேப்டன்கள் கடிதம்!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப் பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நலனுக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராகத் தேர்வானார்.

இதனையடுத்து 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில், அவரது கூட்டணிக் கட்சிகள் திடீரென ஆதரவை விலக்கி கொண்டதால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து ஊழல் புகாரில் அவர் கைது செய்யப்பட்டு, கடந்த 2023-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராவல்பிண்டி நகரின் அடியாலா சிறையில் அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் 73 வயதான இம்ரான் கான், தற்போது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை எதிர் கொண்டு வருவதாகவும், இதற்கிடையில் அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.

இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் பாகிஸ்தான் அரசு வழங்க மறுக்கின்றது என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளானதைத் தொடர்ந்து, இம்ரான் கானை சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இருப்பினும், அவருக்கு சிறையில் முறையான மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான வசதிகள் வழங்கப்படு வதில்லை எனக் கூறப்பட்டது. இதில், சிறையிலுள்ள கடினமான சூழல்களாலும், போதிய மருத்துவ வசதிகள் வழங்கபடாததாலும் இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீத பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது

Scroll to Top