சமீபத்தில் ரசுவா பகுதியில் எந்தவித எச்சரிக்கையுமின்றி திடீரென ஏற்பட்ட சீற்றமிக்க வெள்ளப்பெருக்கு பேரழிவை ஏற்படுத்தியது.
நேபாள நாட்டை சேர்ந்த எழுத்தாளர் சோபியா எல்.பாண்டே அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை முன்கூட்டியே ஒரு பறவையின் வருகையின்மை அறிவித்ததாக தெரிவித்துள்ளார். …
நேபாளம் துணை வெப்பமண்டல அட்சரேகையிலும், இமயமலையின் மடியிலும் அமைந்துள்ளதால் வளமான பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்ட ஒரு எழில்மிகு நாடாகும்.திட்டங்களை உருவாக்கும் போதும், நாட்டின் மூலோபாயத்தைத் திட்டமிடும் போதும், கல்வி முறையை மறுசீரமைக்கும் போதும் பருவநிலை விழிப்புணர்வும் திட்டமிடலும் அதில் இணைக்கப்பட வேண்டும்.
இது புகழ்பெற்ற தேவதாரு மரங்கள் உள்ளிட்ட உள்நாட்டு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தொட்டிலாக விளங்கி வருகிறது. மேலும், சகர்மாதா மற்றும் சிட்வான் ஆகிய 2 யுனெஸ்கோ உலக இயற்கை பாரம்பரிய தளங்களை கொண்டுள்ளதுடன் சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இயற்கை எழில் கொஞ்சும் நாடாக விளங்கியது.
இந்த நிலையில், சமீபத்தில் ரசுவா பகுதியில் எந்தவித எச்சரிக்கையுமின்றி திடீரென ஏற்பட்ட சீற்றமிக்க வெள்ளப் பெருக்கு பேரழிவை ஏற்படுத்தியது. கடந்த வாரம் ஏற்பட்ட சீற்றமிக்க வெள்ளம் உலக அழிவின் காட்சியைப் போல இருந்தது. அது உண்மையில் நடக்கும் வரை கற்பனை செய்து பார்க்க முடியாததாக இருந்தது.
பருவநிலை மாற்றம் திடீரென உருவானது போல் தோன்றினாலும், அது மிகவும் அமைதியாக உருவாகி, எந்த எச்சரிக்கையும் இன்றி ரசுவா பகுதியை அடித்துச் சென்றபோது கொடிய பயங்கரத்துடன் வெளிப்பட்டது. இதற்கு காரணம் வேகமாக மாறிவரும் பருவநிலை மாற்றமே ஆகும்.
இந்த பருவநிலை மாற்றத்தால் நமது பழமையான அரச மரங்கள், வண்ணப் பறவைகள், உயரமான ஏரிகளில் உள்ள தெளிவான நீர், பனிமலைகள், புகழ்பெற்ற தேவதாரு மரங்களால் சூழப்பட்ட குன்றுகள், சுவை நிறைந்த வண்ணமயமான காய்கறிகள், மாசடைந்த காற்றைச் சுத்தப்படுத்தும் வலுவான பருவமழைகள், மனித உயிர்களின் புனிதம் மற்றும் பறவைகள், விலங்குகள் என அனைத்தும் ஆபத்தில் சிக்கியுள்ளன.
குயில்கள் வரவில்லை ஆம், பருவநிலை மாற்றத்தால் ரசுவா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை நமக்கு முன்கூட்டியே இயற்கை தெரிவித்தது. 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் குயில்கள் முதல் முறையாக நேபாளப் பள்ளத்தாக்கு பகுதிக்கு வரவில்லை.
குயில்கள் வழக்கமாக அமரும் லப்சி மரமும், குஞ்சுகளை வளர்க்கும் காகங்களும் அங்கேயே உள்ளபோதிலும், குயில்களின் கூக்கூ…கூக்கூ… குரல் கேட்காததால் அப்பகுதி மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். வெப்பமான வசந்த காலம் மற்றும் பசுமை இடங்கள் குறைந்து வருவதன் காரணமாக குயில்கள் வரவில்லை. இது, உலகின் பருவநிலை ஆபத்தான நிலைக்கு மாறியதன் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
நெகிழி நிறைந்த நதிகள் உலகளாவிய உமிழ்வுகளுக்கு நேபாளம் மிகக் குறைவாகவே பங்களிக்கிறது என்றாலும், நெகிழி நிறைந்த நதிகள் தனிப்பட்ட நுகர்வு மற்றும் அலட்சியத்தின் இயற்கைச் சுற்றுச்சூழலின் பாதிப்பைக் காட்டுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்




