Vimarsagan Media

Home » Malaysia » விவசாயிகள், உணவு உற்பத்தியாளர் களுக்கு அரசு தொடர்ந்து மானியங்கள் வழங்கும் அமைச்சர் முகமது சாபு

விவசாயிகள், உணவு உற்பத்தியாளர் களுக்கு அரசு தொடர்ந்து மானியங்கள் வழங்கும் அமைச்சர் முகமது சாபு

விவசாயிகள், உணவு உற்பத்தியாளர் களுக்கு அரசு தொடர்ந்து மானியங்களை வழங்கும் என்று வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகமது சாபு செவ்வாய்க் கிழமை (செப்டம்பர் 1) தெரிவித்துள்ளார்

2026 மலேசிய வேளாண்மை, தோட்டக்கலை, விவசாயச் சுற்றுலா கண்காட்சியில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிகழ்வுக்குப் பின் அவர் செய்தியாளர் களிடம் பேசினார்.

நெல் உற்பத்தி, மீன்பிடித் துறைகளின் உற்பத்திச் செலவு அதிகமாக இருப்பதால், அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்து தேவைப்படுகிறது என்றார்.

“மானியத் திட்டங்கள் தொடரும், ஆனால் அவற்றை அவ்வப்போது மறுஆய்வு செய்ய வேண்டும்,” என்ற அவர், சந்தை நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து கோழி, முட்டைக்கான மானியங்கள் விலக்கப்பட்டதை உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க உதவி இன்றி உற்பத்தியாளர் களால் தற்சார்புடன் இயங்க முடியும் என்ற நிலை வரும்போது, மானியங்கள் திரும்பப் பெறப்படும். மீனவர்களின் வாழ்வாதாரம், உற்பத்தியை உறுதி செய்யும் வரை அவர்களுக்கான மானியம் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top