சிங்கப்பூரில் பதின்ம வயதுப் பெண்கள் குழந்தை பெறும் எண்ணிக்கை 20 ஆண்டில் இல்லாத அளவுக்கு ஆகக் குறைவாகப் பதிவாகியிருக்கிறது.
சென்ற ஆண்டு 140 குழந்தைகள் பதின்ம வயது தாய்மாருக்குப் பிறந்தன.அதற்கு முந்திய ஆண்டு பிறந்த 244 பிள்ளை களை விட அந்த எண்ணிக்கை 40 விழுக்காட்டுக்கும் மேல் குறைவு.
குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் அந்தத் தகவலை வெளியிட்டது.19 வயதுக்கும் குறைவான பெண்ணுக்குக் குழந்தை பிறந்தால் அது பதின்ம வயதுத் தாய்மாருக்குப் பிறந்த குழந்தையாக ஆணையம் வகைப்படுத்து கிறது.
இந்நிலையில் கடந்த ஐந்தாண்டில் பதின்ம வயதினரிடையே கருக்கலைப்பு விகிதத்தில் பெரிதளவில் மாற்றம் இல்லை என்று சுகாதார அமைச்சு கூறியது.1,000 பேரில் இருவர் கருக்கலைப்புச் செய்திருந்தனர் என
s+eithi media corp செய்தி வெளியிட்டுள்ளது.




