Vimarsagan Media

Home » World » ஈரான் முழு கண்காணிப்பில் உள்ளது.எங்கள் அனுமதியின்றி அவர்கள் கழிவறைக்கு கூட செல்ல முடியாது –

ஈரான் முழு கண்காணிப்பில் உள்ளது.எங்கள் அனுமதியின்றி அவர்கள் கழிவறைக்கு கூட செல்ல முடியாது –

ஈரானில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 108 பேர் காயமடைந்தனர்.ஈரானை அமெரிக்கா முழுமையாக கண்காணித்து வருவதாகவும் தங்களது கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஈரானால் எதையும் செய்ய முடியாது என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “நாங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களது அனுமதியின்றி அவர்களால் நகரக்கூட முடியாது. கழிப்பறைக்குக் கூடச் செல்ல முடியாது” என்று கூறியுள்ளார்.

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்தத் நாங்கள் தயார் நிலையில் உள்ளோம் என்றும், இந்தத் தற்காலிக மோதல் நீண்ட காலம் நீடிக்காது என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.ஈரானின் புதிய முயற்சிகள் அனைத்தையும் தங்களது ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் தகர்த்தெறிந்து உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை பதிப்பதற்காக ஈரான் தயாரித்து வந்த ஒரு பெரிய ராக்கெட்டின் பணி நிறைவடையும் தருவாயில், அதைத் தங்களது படைகள் கண்டறிந்து அழித்ததாகவும் டிரம்ப் மேலும் கூறினார்.

Scroll to Top