Vimarsagan Media

Home » World » மிக மோசமான அபாயக் கட்டத்தை நெருங்கும் பூமி! இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை! எச்சரிக்கை!

மிக மோசமான அபாயக் கட்டத்தை நெருங்கும் பூமி! இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை! எச்சரிக்கை!

புவியின் சராசரி வெப்பநிலையானது 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அபாய அளவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இயற்கைப் பேரிடர்களால் மனித குலம் பேரழிவைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தின் மிக மோசமான விளைவுகளைத் தடுப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட உலகளாவிய வெப்பமயமாதலின் முக்கியமான வரம்புதான் 1.5 டிகிரி செல்சியஸ் அளவாகும். இது 1850 மற்றும் 1900-க்கு இடைப்பட்ட காலத்துடன் ஒப்பிடுகையில், பூமியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை தொடர்ந்து அளவிட்டு வரும் விஞ்ஞானிகள், புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் என்பதை அடைவது மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதனை வரம்பாக அறிவித்திருந்தனர்.

எப்போதும் சொல்வது போல இது ஏதோ வெப்பநிலை குறித்த சாதாரண எச்சரிக்கையல்ல, இந்த வரம்பு என்பது 20 ஆண்டுகால உலகளாவிய சராசரி அதிகரிப்பைக் குறிக்கிறது; மாறாக, வெப்பமான ஒரு மாதம் அல்லது ஆண்டு பற்றிய தகவல் அல்ல.

அதோடு, வெறும் 1.5 டிகிரி செல்சியஸ்தானே என சாதாரண மக்களும் சரி படித்தவர்களும்கூட நினைக்கலாம். காரணம், இன்று சென்னையில் 30 டிகிரி செல்சியஸ் இருக்கிறது. அடுத்த வாரம் 10 டிகிரி வரை கூடி 40 டிசிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்தாலும்கூட நாம் தாங்கிக் கொள்கிறோம் என்று கணக்கிடுவோம்.

ஆனால், உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குள் நுழையப்போகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிப்பது அதற்கும் மேல் பூமி உருவாகி 400 கோடி ஆண்டுகளுக் கும் மேல் ஆகிறது. பூமி தோன்றியபோது இருந்த வெப்பநிலை, மழை அளவு என எதுவுமே இப்போது இல்லை. இதற்குக் காரணமாக படிப்படியாக மனிதன் செய்த மாற்றங்கள்தான்.

Scroll to Top