Vimarsagan Media

Home » Malaysia » முன்னாள் தபோங் ஹாஜி தலைவர் அப்துல் அஜீஸ் மீது நாளை நீதிமன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பபலாம்!

முன்னாள் தபோங் ஹாஜி தலைவர் அப்துல் அஜீஸ் மீது நாளை நீதிமன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பபலாம்!

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-இன் கீழ், முன்னாள் தபோங் ஹாஜி (TH) தலைவர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம் மீது நாளை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

நீதிமன்றத்தின் மின்னணுத் தாக்கல் முறையின்படி, பாலிங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அஜீஸ், காலை 9 மணிக்கு நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் குற்றம் சாட்டப்படுவார்.

ஆகஸ்ட் 27 அன்று, யாத்ரீகர்களின் நிதி தொடர்பான அரச விசாரணை ஆணையம் (RCI) வெளிப்படுத்திய தகவல்களைத் தொடர்ந்து, விசாரணைகளுக்கு உதவுவதற்காக முன்னாள் TH தலைவரும், முன்னாள் கருவூலச் செயலாளர் ஒருவரும் செப்டம்பர் 2 வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக, MACC சட்டம் 2009-இன் பிரிவு 23(1)-இன் கீழ் இவ்விருவர் மீதும் விசாரணை நடத்தப்படுகிறது.

2014 முதல் 2020 வரை TH நிறுவனத்தின் நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் சொத்துக்களை ஆய்வு செய்த RCI, சிக்கலில் இருந்த முதலீடுகளால் ஏற்பட்ட நஷ்டங்கள் பதிவு செய்யப்படாமல் இருந்ததையும், வருடாந்திர இலாபப் பங்கீடுகளை நியாயப்படுத்த “கற்பனையான கணக்கியல்” பயன்படுத்தப்பட்டிருந்ததையும் கண்டறிந்தது.

Scroll to Top