‘லெம்பாகா தாபோங் ஹாஜி’ தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கையில் எழுப்பப்பட்ட விவகாரங்கள் குறித்த விசாரணைக்கு உதவ காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
60 வயது மதிக்கத்தக்க அந்த நபர், அவரது காவல் காலம் செவ்வாய்க்கிழமையுடன் (செப்டம்பர்
முடிவடைந்ததையடுத்து விடுவிக்கப் பட்டார்.
அந்த முன்னாள் அமைச்சர் MACC-யின் பிணையில் விடுவிக்கப்பட்டதை, அவ்வமைப்பின் தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமன் உறுதிப்படுத்தினார்.இந்த முன்னாள் அமைச்சர் ஆரம்பத்தில் ஐந்து நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தார்; பின்னர் அவரது காவல் காலம் செவ்வாய்க்கிழமை வரை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
தாபோங் ஹாஜியின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான RCI அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விவகாரங்களுடன் இந்த விசாரணை தொடர்புடையது.
விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காகப் புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்திற்கு வந்திருந்தபோது, அந்த முன்னாள் அமைச்சர் முன்னதாகக் காவலில் எடுக்கப்பட்டார்.
சவுதி அரேபியாவில் உள்ள தாபுங் ஹாஜியின் ஹோட்டல் குத்தகை தொடர்பான விவகாரங்களும் இந்த விசாரணையில் அடங்கும் என்று அறியப்படுகிறது




