விநாயகப் பெருமான் அவதரித்த ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதிஎன புராணங்கள் சொல்கின்றன. இதனாலேயே இதை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். முழு முதற்கடவுளாக இந்து மதத்தில் போற்றப்படும் விநாயகரை வழிபடுவதால் தடைகள், துன்பங்கள் விலகி வெற்றிகள், மகிழ்ச்சி, செல்வ செழிப்பு ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை. விநாயகப் பெருமானை வழிபட்டு விட்டு எந்த காரியத்தை துவங்கினாலும் தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும் என்பார்கள். அத்தகைய விநாயகப் பெருமானை அவர் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுவதால் வாழ்வில் நமக்கு இருக்கும் துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை




