இன நல்லிணக்கத்துக்குக் கேடு விளைவிக்கும் தகவல்களையும் செய்திகளையும் தடுக்க இச்சட்டம் வழிவகுக்கும்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் (Maintenance of Racial Harmony Act 2025) நிறைவேற்றப்பட்டது.
சிங்கப்பூரின் சட்டக் கட்டமைப்பை ஒருங்கிணைத்து வலுப்படுத்தி, இன நல்லிணக்கத்தைப் பாதுகாக்க அந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.
புதிய சட்டத்தின்கீழ், இன, சமய நல்லிணக்கத்திற்கான புதிய அதிபர் மன்றமும் (Presidential Council for Racial and Religious Harmony) அமைக்கப்படுகிறது.
ஏற்கெனவே உள்ள சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் மன்றத்துக்குப் பதில் புதிய மன்றம் செயல்படும்.




