Vimarsagan Media

Home » Malaysia » ஆபத்தான திரவத்தை ஊட்டிய தாய்! ஒருவர் மரணம் இருவர் ரணம்

ஆபத்தான திரவத்தை ஊட்டிய தாய்! ஒருவர் மரணம் இருவர் ரணம்

காஜாங்கில் தனது மூன்று குழந்தைகளுக்கு மெதடோன் என்று நம்பப்படும் ஆபத்தான திரவத்தை ஊட்டி, அதில் ஒருவர் இறந்துவிட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணை நேற்று காலை போலீசார் கைது செய்துள்ளனர்.


சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் இந்த வழக்கை உறுதிப்படுத்தி, 35 வயதான சந்தேக நபர் காஜாங்கில் தடுத்து வைக்கப்பட்டு ள்ளதாகக் கூறினார்.“ஆம், ஒரு குழந்தை இறந்துவிட்டதாக நான் உறுதிப்படுத்துகிறேன், மற்ற இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரைவில் முழு ஊடக அறிக்கை வெளியிடப்படும்,” என்று நேற்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.


முன்னதாக, காஜாங்கில் உள்ள தெங்கு பெர்மைசுரி நோராஷிகின் மருத்துவமனையில் ஒன்பது மற்றும் ஐந்து வயதுடைய அவரது இரண்டு தம்பிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த நிலையில், 11 வயது சிறுவன் இறந்துவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

Scroll to Top