Vimarsagan Media

Home » Malaysia » புத்ராஜயா MRT வழித்தடத்தில் கேபிள் திருட்டால் சேவை பாதிப்பு

புத்ராஜயா MRT வழித்தடத்தில் கேபிள் திருட்டால் சேவை பாதிப்பு

புத்ராஜயா MRT வழித்தடத்தில் உள்ள ‘தாமான் ஈக்வைன்’ (Taman Equine) நிலையத்திற்கு அருகில் கேபிள் திருடப்பட்டதால் மின்சாரம் தடைப்பட்டு, இன்று காலை ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

நிலையத்தில் ரயில் ஒன்று நகர முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, காலை சுமார் 5.25 மணியளவில் இந்தச் சம்பவம் கண்டறியப்பட்டதாக ‘ராபிட் கேஎல்’ (Rapid KL) தெரிவித்தது.

மின்சாரம் மற்றும் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க ஆய்வு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள தொழில்நுட்பக் குழுக்கள் அனுப்பப் பட்டதாக அது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடர உதவும் வகையில் மாற்று ரயில் சேவைகள் மற்றும் இலவச ஷட்டில் பேருந்து சேவைகள் (shuttle bus services) செயல்படுத்தப்பட்டுள்ளன.

குவாசா டமன்சாராவிலிருந்து (Kwasa Damansara) வரும் ரயில்கள் UPM நிலையத்திலும், UPM-லிருந்து வரும் ரயில்கள் ’16 சியாரா’ (16 Sierra) நிலையத்திலும் திரும்பிச் செல்லும். இவ்விரு சேவைகளும் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’16 சியாரா’ மற்றும் ‘புத்ராஜயா சென்ட்ரல்’ (Putrajaya Sentral) நிலையங்களுக்கு இடையே ஒரு ஷட்டில் ரயில் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

போக்குவரத்து நெரிசலைப் பொறுத்து, 15 முதல் 20 நிமிட இடைவெளியில் செர்டாங் ஜெயா, UPM, தமன் ஈக்வைன், புத்ரா பெர்மாய், 16 சியாரா, சைபர்ஜெயா உத்தாரா, சைபர்ஜெயா சிட்டி சென்டர் மற்றும் புத்ராஜயா சென்ட்ரல் நிலைய ங்களுக்கு இடையே இலவச ஷட்டில் பேருந்துகளும் இயக்கப்படும்.

குறிப்பாக UPM, 16 சியாரா மற்றும் புத்ராஜயா சென்ட்ரல் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது

Scroll to Top