நாடு தழுவிய ‘மலேசியா தூய்மைப் படுத்தும் நாள் 2026’ (Malaysia Clean-up Day 2026) நிகழ்வின் ஒரு பகுதியாக, பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயா ஆகிய இடங்களில் தன்னார் வலர்கள் சுமார் 900 கிலோ கழிவுகளைச் சேகரித்தனர்.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தாமான் அமான், தாமான் பண்டாரான் கெலானா ஜெயா மற்றும் கம்போங் செலாமாட் ஆகிய பகுதிகளில், 381.85 கிலோ திடக் கழிவுகளைச் சேகரிக்க சுமார் 250 பேர் ஒன்றிணைந்தனர். இதில் குடியிருப்பா ளர்கள், மாணவர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், பெட்டாலிங் ஜெயா மாநகர சபை (MBPJ) மற்றும் KDEB Waste Management Sdn Bhd (KDEBWM) ஆகியவற்றின் ஊழியர்கள் அடங்குவர்.
இந்நிகழ்ச்சியில் மறுசுழற்சி நடவடிக்கை களும் இணைக்கப்பட்டிருந்தன.
Tetrapak நிறுவனத்துடன் இணைந்து, PJ Eco Recycling Plaza-வில் MBPJ ‘Careton’ எனும் திட்டத்தை நடத்தியது; இதில் 81 பங்கேற்பாளர்கள் 55 கிலோ எடையுள்ள 3,100 பான அட்டைப் பெட்டிகளை (beverage cartons) ஒப்படைத்தனர்.
இம்முயற்சிகளுக்குத் துணையாக, தாமான் அமான் பகுதியில் அமைக்கப் பட்ட சேகரிப்பு மையத்தில் 331.12 கிலோ பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிக்கப்பட்டது.தனித்தனியாக, சுபாங் ஜெயா மாநகர சபை (MBSJ) SS15 ஈரச் சந்தை மற்றும் அருகிலுள்ள வணிகப் பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியை முன்னின்று நடத்தியது.




