பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் லீ சியான் சுங் (பார்ட்டி பெர்சாமா மலேசியா’ (Bersama) கட்சியில் இணைவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
லீ நேற்று திங்கட்கிழமை (அக்டோபர் 5) கட்சியில் இணைவதற்கான விண்ணப்பத்தை அனுப்பியதாக பெர்சாமா கட்சியின் இணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரபிசி ராம்லி தெரிவித்தார்.
“கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைமுறைகளின்படி இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.கட்சி தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், அவரது வருகை கட்சியின் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
செப்டம்பர் 30 அன்று தனது PKR கட்சி உறுப்பினர் தகுதி மூன்று ஆண்டு களுக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்ட தைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக் கிழமை (அக்டோபர் 2) பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக லீ அறிவித்தார்.
பெர்சாமா கட்சியின் நிகழ்வுகளில் லீ பங்கேற்றதைத் தொடர்ந்து, அடிமட்டத் தொண்டர்களிடையே ஏற்பட்ட அதிருப்தியே இந்த இடைநிறுத்த நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்தது.
வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்தும் பொறுப்பை லீ ஏற்பார் என்றும், குறிப்பாக சீனர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரக் கட்டமைப்பை வலுப்படுத்து வதில் கவனம் செலுத்துவார் என்றும் ரபிசி கூறினார்.




