அரசாங்கத்துக்குச் சேர வேண்டிய 314 மில்லியன் ரிங்கிட் நிலுவைத் தொகையை மீட்பதே தமது அமைச்சின் முதன்மை நோக்கமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அந்நிறுவனங்களுக்கு அம்னோ கட்சியுடன் தொடர்பு உள்ளதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் லோக், எந்தவொரு நிறுவனத்தையும் குறிப்பிட்ட அரசியல் கட்சியோடு தொடர்புபடுத்துவது தமது வேலை அல்ல என்றும் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அனைத்து நிறுவன ங்களும் முகவர்களும் சமமாகவே நடத்தப்படுவதாகவும் கூறினார்.
சாலைப் போக்குவரத்துத் துறையின் சார்பில் வசூலிக்கப்பட்ட அரசாங்க வருவாயைச் செலுத்த வேண்டிய கடமையின் அடிப்படையிலேயே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக அமைச்சர் லோக் விளக்கமளித்தார்.
மைஇஜி, ஸெட்ரிக்ஸ் ஆகியவற்றின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப் பட்டதைத் தொடர்ந்து, சமூக ஊடகங் களில் சிலர் தமது பதவி விலகலைக் கோரி வருவதையும் அவர் கடுமையாகச் சாடினார்.
“நடவடிக்கை எடுத்தவுடன், சிலர் உடனே நான் பதவி விலக வேண்டும் என்கிறார் கள். பணத்தைச் செலுத்தாத நிறுவனம் பொறுப்பேற்கக் கேட்கப்படவில்லை. ஆனால் நடவடிக்கை எடுத்த அமைச்சரை விலகச் சொல்கிறார்கள். இது என்ன மாதிரியான விவாதம்?” என்று அமைச்சர் லோக் கேள்வி எழுப்பினார்.
நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்துமாறு அந்த நிறுவனங்களை அமைச்சர் லோக் கேட்டுக்கொண்டார். அந்தப் பணம் நிறுவனங்களுக்குச் சொந்தமானது அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.




