Vimarsagan Media

Home » Malaysia » மலேசியர் சிங்கப்பூர் வேலைக்குச் செல்வதற்கு உயர் சம்பளமும் அதிக வாய்ப்புகளுமே முதன்மைக் காரணம்

மலேசியர் சிங்கப்பூர் வேலைக்குச் செல்வதற்கு உயர் சம்பளமும் அதிக வாய்ப்புகளுமே முதன்மைக் காரணம்

2025ஆம் ஆண்டு புள்ளியியல் துறை ஆய்வின்படி நம் நாட்டு வல்லுநர்களின் சராசரி மாதச் சம்பளம் 6,124 ரிங்கிட் ஆக உள்ளது என்று நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வ கேள்விக்கு பதிலளித்த மனிதவள அமைச்சர் ஆர்.ரமணன் கூறினார்.

சிங்கப்பூரில் பணிபுரியும் பெரும்பாலான மலேசிய வல்லுநர்கள் மாதம் $4,001 சிங்கப்பூர் வெள்ளி முதல் $7,000 வெள்ளி வரை (12,773 ரிங்கிட் முதல் 22,348 ரிங்கிட் வரை) ஈட்டுவதாக ‘டேலண்ட்கார்ப்’ அமைப்பின் ஆய்வு காட்டுகிறது என்று அவர் கூறினார்.

மலேசியர்கள் சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்வதற்கு உயர் சம்பளமும் அதிக வருமான வாய்ப்பு களுமே முதன்மைக் காரணம் என்று ஆய்வில் பங்கேற்ற 94.5 விழுக்காட்டினர் கூறியதாக அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த வல்லுநர்கள் சிங்கப்பூரில் மாதம் $10,000 வெள்ளிக்கும் மேல் சம்பாதிக்க முடிகிறது.

இந்தச் சம்பள இடைவெளியைக் குறைக்கவும் திறனாளர்கள் வெளியேறு வதைத் தடுக்கவும் மலேசிய அரசாங்கம் வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Scroll to Top