இத்தாலியை சேர்ந்த தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடிக்கிறார் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா.நடிகர் அர்ஜுனின் மகள் அஞ்சனாவின் திருமணம் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன்.
அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் கடந்த 2024ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இளைய மகள் அஞ்சனாவுக்கு தொழிலதிபராக மாற வேண்டும் என்பதே அவரின் ஆசை. எனவே கடந்த 2023-ம் ஆண்டு இயற்கை சூழலுக்கு உகந்த ஹேண்ட் பேக்கு களைத் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்.
இந்த நிலையில் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா, தனது நீண்டகாலக் காதலரான இசாய் என்பவரை வரும் அக்டோபர் 18ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட 13 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த வருடம் இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற கோமா ஏரிக்கரையில் கடந்த ஜனவரி 21ம் தேதி நடைபெற்றது.
நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ளும் எளிய மற்றும் தனிப்பட்ட நிகழ்வாக இந்தத் திருமணம் நடைபெற உள்ளது.




