கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்க மற்றும் புலனாய்வுத் துறையின் தலைமை உதவி ஆணையர் முகமட் ஷம்சூரி முகமட் இசா, நகர மையத்தின் கட்டமைப்பு அடர்த்தி வெளியேற்ற சத்தத்தை அதிகரிக்கிறது என்றார். சட்டவிரோத பந்தயங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மாற்றங்களில் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து, ஓப் செலாமாட் 25 இன் கீழ் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் இரண்டு கட்டங்களாக பல இடங்களில் நடத்தப்பட்பதில் 110 வாகனங்கள் கைப்பற்ற பட்டன என அவர் கூறினார்.
மாற்றியமைக்கப்பட்ட எக்ஸாஸ்ட்கள் அதிக சத்தத்தை உருவாக்குகின்றன. கோலாலம்பூரில் பல உயரமான கட்டிடங்கள் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படும்போது, ஒலி எதிரொலித்து சமூகத்திற்கு தொந்தரவாக மாறும்,” என்று அவர் கூறினார்.
இன்று அதிகாலை இங்கு 2026 சீனப் புத்தாண்டு ஓப் செலாமாட்டுடன் இணைந்து நடைபெற்ற ஒருங்கிணைந்த நடவடிக்கையை கண்காணித்த பிறகு ஜம்சூரி செய்தியாளர்களிடம் பேசினார்.




