Vimarsagan Media

Home » World » வாய் வாடகை:- உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்க கட்டணம் உண்டு

வாய் வாடகை:- உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்க கட்டணம் உண்டு

வாய் இல்லை என்றால், உன்னை நாய் தூக்கிட்டு போய்டும்’ என கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. அதிகம் பேசுவர்களை இவ்வாறு கிண்டலாக சொல்வர்.

இந்நிலையில் இந்த சொலவடைக்கு பொருந்தும் வகையில், அந்த வாயை வைத்தே தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர்.

தென் சீனாவின் குவாங்சோவைச் சேர்ந்த நபர் ஒருவர், யாருக்காவது பிறருடன் பிரச்னை ஏற்பட்டால், அவர்களுக்காக வாதாடி அப்பிரச்சனையை சுமூகமாக முடித்து வைக்கிறார். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையையும் வசூல் செய்கிறார் உங்கள் சார்பாக வாதிடுகிறேன்) என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியபடி, அவர் நடந்து செல்லும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அலுவலக சண்டைகள், மாணவர்களுக்கு வகுப்புகளில் சரியாக பாடம் எடுக்காதது, மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை இல்லை என எந்தப் பிரச்சனை என்றாலும் பேசி தீர்த்து சம்பந்தப்பட்ட வர்களுக்கு உரிய நீதியை பெற்றுத் தருகிறார்.

காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை இந்த வேலையை செய்கிறார். தனது வழக்கில் வெற்றி பெரும் வரை தான் பேசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் கைக்கலப்பு இல்லை தனது கட்சிக்காரர்களுக்காக சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து பேசினாலும், எப்போதும் தனது வாக்கு வாதம் கைக்கலப்பில் முடிந்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் வாக்குவாதம் எப்போதாவது சண்டையில் முடிந்துள்ளதா? என ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர். “முதலாவதாக, சண்டையிடுவதில்லை; இரண்டாவதாக, கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை. ஏனென்றால், சண்டையில் ஈடுபட்டு, யாராவது காவல்துறையை அழைத்தால், கைது செய்யப்படுவீர்கள்.

Scroll to Top