உத்தரகண்ட் மாநிலத்தின் பத்ரிநாத்திலிருந்து ஜோஷிமத் பகுதிக்கு அருகில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் இந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், அதில் இருந்த ஐந்து பயணிகள் மற்றும் ஒரு விமானி என அனைவரும் உயிரிழந்ததாக மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது.
“விபத்து நடந்த இடம் மிகவும் கடினமான நிலப்பரப்பைக் கொண்டிருப்பதால், அங்கிருந்து உடல்களை மீட்டு அருகிலுள்ள சாலைக்குக் கொண்டு வரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன” என்று காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.
இந்திய வானிலை ஆய்வு மையம், வெள்ளிக்கிழமையன்று அந்த மாநிலத்தில் “பரவலான” மழை பெய்யக்கூடும் என்று முன்னறிவித்தி ருந்தது. இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான், இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ‘அர்னாப்’ (Arnab) புயல் கரையை கடந்திருந்தது.
மலைப்பகுதிகளில் உள்ள புனிதத் தலங்களுக்குச் செல்ல விரும்பும் வசதி படைத்த பக்தர்கள், கடினமான நடைப்பயணத்தைத் தவிர்ப்பதற்காக, ஹெலிகாப்டர் சேவை நிறுவனங்களை நாடுகின்றனர்




