Vimarsagan Media

Home » Malaysia » தேசிய அளவிலான சிறுவணிகர்கள் தினக் கொண்டாட்டம் :-1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு பிரதமர் அறிவிப்பு

தேசிய அளவிலான சிறுவணிகர்கள் தினக் கொண்டாட்டம் :-1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு பிரதமர் அறிவிப்பு

சிறுவணிகர்கள், உணவங்காடிக் கடைக்காரர்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் 1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுவதாகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

தொழில்முனைவர் மேம்பாடு, கூட்டுறவு அமைச்சின் ஒருங்கிணைப்பின்கீழ் அந்த நிதி உதவி வழங்கப்படும்.

தேசிய அளவிலான சிறுவணிகர்கள் தினக் கொண்டாட்டத்தின் நிறைவுவிழாவில் நிதி உதவி குறித்து அன்வார் அறிவித்தார்.

“சிறுவணிகர்க்அள் மற்றும் பல்வேறு சங்கங்களின் மாபெரும் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் வருமானம் ஆண்டுதோறும் சீராக அதிகரிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் முக்கிய இலக்கு,” என்று நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.

“பெரும்பாலான சிறுவணிகர்கள் அன்றாட வாழ்க்கைக்கே மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்கள் கடன்பெற நாள் முழுவதும் விண்ணப்பப் படிவங்களை நிரப்புவது பெருஞ்சுமை என்பதால் அதற்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top