Vimarsagan Media

Home » World » ஜப்பானில் இன்று நிலநடுக்கம் நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.

ஜப்பானில் இன்று நிலநடுக்கம் நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.

ஜப்பானின் ஷிமா நகருக்கு தென்கிழக்கே 58 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6-ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 352 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சேதங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.

Scroll to Top