தீபாவளியைக் கொண்டாடும் பொதுப் பல்கலைக்கழகங்கள், பலதொழில்நுட்பக் கல்லூரிகள் (polytechnics) மற்றும் சமூகக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், நவம்பர் 5 முதல் 13 வரை தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று, இணையவழியாகவோ அல்லது கலப்பு முறையிலோ (hybrid classes) வகுப்புகளில் பங்கேற்கலாம்.
இந்தக் பண்டிகைக் காலத்தில் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் கல்வித் திட்டங்களின் தேவை மற்றும் பொருத்தப்பாட்டிற்கு ஏற்ப, இணையவழி அல்லது கலப்பு முறை வகுப்புகளைச் செயல்படுத்திக்கொள்ளலாம் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
“கற்பித்தல், கற்றல் செயல்முறைகள் மற்றும் கல்விச் செயல்பாடுகள் எவ்விதத் தடையுமின்றிச் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று அந்த அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




