குறிப்பாகக் கோயில்கள், நிலம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றார் அவர்.
அதற்காக அமைக்கப்பட்ட சிறப்புப் பணிக்குழு தொடர்ந்து செயல்படும் என்று ஒன் ஹஃபிஸ் கூறினார்.
ஜொகூர் பாருவில் நேற்று (நவம்பர் 1) நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத் தில் ஒன் ஹஃபிஸ் பேசியதாக தி ஸ்டார் இணையத்தளம் தெரிவித்தது.
தீபாவளியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உணவுப் பொருள்களை மானிய விலையில் விற்க மில்லியன்கணக்கான ரிங்கிட் ஒதுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தேவைப்படுவோருக்கு உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன. முந்தைய கட்டத்தில் நிதியுதவி கிடைக்காமல் மேல்முறையீடு செய்தவர்களுக்கும் அண்மையில் உதவித்தொகை வழங்கப்பட்டதாக அவர் கூறினார்




