நிதி சார்ந்த கவலைகள், பொருத்தமான துணையின்மை ஆகியவை மக்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன என
பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் நான்சி சுக்ரி, நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற ‘ஆறாவது மலேசிய மக்கள் தொகை, குடும்ப ஆய்வின்’ அறிக்கை வெளியீட்டு விழாவில் இந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
ஆறாவது மலேசிய மக்கள் தொகை, குடும்ப ஆய்வு என்பது, சிறந்த குடும்பக் கொள்கைகளை வகுப்பதற்கு உதவும் வகையில், தேசிய மக்கள் தொகை, குடும்ப மேம்பாட்டு வாரியத்தால் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடத்தப்படும் ஒரு தேசிய அளவிலான ஆய்வு.
திருமணமாகாதவர்களில் 50.6 விழுக்காட்டினர் தங்களுக்கு ஏற்ற துணை கிடைக்காததே தாங்கள் இன்னும் திருமணமாகாமல் இருப்பதற்குக் காரணம் என்று கூறியுள்ளதாகவும், 47.2 விழுக்காட்டினர் நிதி சார்ந்த காரணங்களைக் குறிப்பிட்டுள்ளதாகவும் நான்சி தெரிவித்தார்.
“இருப்பினும், குடும்பத்தைத் தொடங்க வேண்டும் என்ற விருப்பம் வலுவாகவே உள்ளது. திருமணமாகாதவர்களில் பத்தில் எட்டு பேருக்கும் அதிகமானோர் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தைக் கொண்டுள்ளனர்.
“மேலும், சராசரி குடும்ப அளவு 2014ல் 4.0 நபர்களாக இருந்த நிலையில், 2024ல் அது 3.8 நபர்களாகக் குறைந்துள்ளதையும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
“இதே காலகட்டத்தில், முதலாவது திருமணத்தின் சராசரி வயது ஆண்களுக்கு 27.1 ஆகவும், பெண்களுக்கு 24 ஆகவும் உயர்ந்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.




